எதிர்வரும் ஒருமாத காலப்பகுதி மிகவும் தீர்க்கமானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவிட் பரவலை கட்டுக்குள்கொண்டு வர தேவையான சுகாதார விதிமுறைகளை மேலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இந்த வாரத்தில் தொடர்ச்சியான விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அநேகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்குச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.
கொரோனா தொற்று நிலைமையை மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தேவையான மேலும் சுகாதார விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது நாட்டில் இனங்காணப்படும் கோவிட் நோயாளர்கள் மற்றும் கோவிட் மரணங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதற்காக மக்கள் பெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்.
இந்நிலையில், கோவிட் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முக்கிய காலப்பகுதியாக எதிர்வரும் ஒரு மாதட காலம் கருதப்படுகின்றது. ஆகையினால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எதிர்வரும் காலப்பகுதியில் கோவிட் பரவலை மேலும் குறைக்க முடியும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.