நடிகை பிரியாமணியின் திருமண வதந்திகளுக்கு கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டு பதிலாடி கொடுத்திருக்கின்றார்.
பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் சமீபத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.
ஆயிஷா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரைத் தான் 2017ம் ஆண்டு பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திடீரென்று கணவரின் முதல் மனைவியால் பிரச்சினை எழுந்தது.
இதனால் பிரியா மணி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சில ஊடகங்கள் அதிகார பூர்வம் இல்லாத தகவல்களை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில், இப்படி பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியா மணி தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் இவர் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.