சர்க்கரை வியாதி வந்துடுச்சா.. அப்போ இனிமேல் தினம் பாகற்காய் ஜூஸ், பாகற்காய் பொரியல், வறுவல், என அனைத்தும் ஒரே காய் எடுத்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து இருக்கும். ஆனால் அதில் இருக்கும் கசப்பு சுவை நினைத்தாலே பயமும் சேர்ந்து இருக்கும்.
விதவிதமா ஜூஸ் எடுத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம். சரி வாங்க பாகற்காயில் விதவிதமான ஜூஸ் எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
ஜூஸ்-1
தேவையான பொருள்கள்:-
பாகற்காய்
உப்பு
மஞ்சள் தூள்
எலுமிச்சை
தண்ணீர்
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் உப்பு சேர்த்து கொள்ளவும். பாகற்காய் தோல் நீக்காமல், விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் ஊறவைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு பாகற்காய் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். அதனால் கசப்பு சுவை குறைவாக இருக்கும்.
ஜூஸ் -2
தேவையான பொருள்கள்:-
பாகற்காய்
உப்பு
எலுமிச்சை சாறு
பேரிக்காய் சாறு
ஆப்பிள்
செய்முறை:-
பாகற்காய் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் , உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து கொள்ளவும். அதை வடிகட்டி அதனுடன் பேரிக்காய் மற்றும் ஆப்பிள் சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து பருகலாம். இது போன்று பாகற்காயில் ஜூஸ் செய்து குடித்தால் ஒரேய மாதத்தில் நம்மை பிடித்திருக்கும் சர்க்கரை நோயை விரட்டி அடித்து விடலாம்.