கொழும்பு துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 1000 கொள்கலன் அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக போதுமான டொலர்களை வங்கிகளுக்கு அனுப்புமாறு அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்காது போனால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பருப்பு, அரிசி, சீனி, வெள்ளைப்பபூடு உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையே துறைமுகத்தில் இருந்து உடனடியாக விடுவிக்கவேண்டியுள்ளது.
இந்தநிலையில், இறக்குமதிப் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும்போது, தாமதக்கட்டணம் போன்ற கட்டணங்களை அறிவிடவேண்டாம் என்றும் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
இந்த கட்டணங்களை அகற்றாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யமுடியாதிருக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் துறைமுகத்தில் 500 கொள்கலன்களே தேங்கியுள்ளதாக சுங்கப்பணிப்பாளர் ஜீ.வீ. ரவிப்பிரிய தெரிவித்துள்ளார்.