ஆராச்சி கட்டுவ வைரன்கட்டுவ பிரேதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த சிறிய சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அதனை தூக்கி அருகே இருந்த கழிவு நீரில் வீசியுள்ளனர்.
இன்றைய தினத்தில் கொள்வனவுச் செய்து வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த ஐந்து கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரை, இணைக்கும் போதே கசிவு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்தை பற்றியுள்ளது. உடனடியாக செயற்பட்டமையால், உயிர்ச் சேதங்களோ, சொத்துச் சேதங்களோ ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். கசிவு ஏற்பட்ட சிறிய நேரத்தில் அதில் தீ பற்ற தொடங்கிய நிலையிலையே அதனை கழிவு நீரில் தூக்கியெறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.