சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
பொருட்களின் விலை உயர்வை நிறுத்த முடியாது என்ற போதும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்ய இடமளிக்கப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
எனினும், பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.