காலி லப்புதுவ பிரதேசத்தில் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை இளைஞர்கள் சிலர் தாக்க முயற்சித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த அமைச்சர் சென்ற வாகன தொடரணி லப்புதுவ சந்தையில் உள்ள முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
அப்போது அமைச்சர் அங்கிருந்த இளைஞர்களை பார்த்து “என்ன தம்பி…” என அதிகார தொனியில் கேட்டுள்ளார்.
அமைச்சர் அப்படி கேட்டதால், கோபமடைந்த இளைஞர்கள் “ஏன்.. ஏன்.. என்ன ஐயா” என கூறியவாறு ஒன்று கூடிய அமைச்சரை தாக்க தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அச்சமடைந்த அமைச்சரின் சாரதி உடனடியாக செயற்பட்டு, வாகனத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.