லண்டனில் வசிக்கும் 90 வயதான இலங்கை பெண் இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவும், மாடி படிக்கட்டுகளில் எளிதாக ஏறி, இறங்கும் அளவுக்கு ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, அசத்தலான நடனமும் ஆடுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்தவர் Winnie (90). இவர் கணவருடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு குடியேறிவிட்டார். ஆனால் பிரித்தானியா வந்த இரண்டு வாரத்தில் கணவரும், Winnieம் பிரிந்தனர்.
பின்னர் தனது ஒரே மகளான ஷாமா பெரேரா (63)வை தனியாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட Winnie பல சிரமங்களை தாண்டி அதை செய்தும் காட்டினார்.
தற்போது 90 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் Winnie சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அசத்தலாக நடனமாடியது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.
Winnie கூறுகையில், என் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகே எனக்கு சுதந்திரம் கிடைத்தது போல உணர்ந்தேன், அதுவே என் அடுத்தக்கட்ட வாழ்க்கை நோக்கி உற்சாகமாக பயணிக்க வைத்தது. என்னுடைய சுறுசுறுப்புக்கு காரணம் என்ன என கேட்கிறீர்கள், தினமும் காலையில் இரண்டு கப் இஞ்சி தேநீர் அருந்துவேன்.
தோட்ட வேலைகளில் மகிழ்ச்சியாக ஈடுபடுவேன். என் காலை உணவுக்கு பிறகே இஞ்சி தேநீர் குடிப்பேன். சமீபத்தில் என் நண்பர் திருமணத்தில் கலந்து கொண்டேன். அங்கு என்னை நடனமாட கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் என்னால் முடியாது என்றேன், பின்னர் துணிச்சலுடன் ஆடினேன் என கூறுகிறார்.
Winnieயுடன் சேர்த்து உடன்பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் ஆவர், இதில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர்.
என் கணவர் பிரித்தானியாவுக்கு வர சொன்னதால் தான் இலங்கையில் இருந்து வந்தேன், இங்கு வந்த இரு வாரத்தில் நாங்கள் பிரிந்துவிட்டோம். பின்னர் என் மகளுடன் தனியாக தவித்தேன். என்னிடமும் என் மகளிடமும் ஏழு முறை பொருட்கள் திருடப்பட்டன.
ஆனாலும் இதையெல்லாம் பார்த்து பயப்பட எனக்கு நேரமில்லை, ஏனெனில் எனக்கு என் சொந்த காலில் நின்று என் மகளை வளர்க்க வேண்டும் என்பதே எண்ணம்.
பின்னர் பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு துறையில் ஒரு பணி கிடைத்தது, அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர் என கூறுகிறார். செய்திதாள்களை இப்போதும் நாள் தவறாமல் படித்து விடுகிறார் Winnie.
தனது பேரப்பிள்ளைகள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ள அவர் தன் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக செல்வதாக கூறியுள்ளார்.