அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ்(வயது 37), பிறப்பில் பெண்ணாக இருந்தாலும் 2011ம் ஆண்டு தனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளார்.
அப்போது தான் ஒரு திருநம்பியாக மாறியிருப்பதை உணரத்தொடங்கினார், எனினும் அதை அவர் வெளியில் கூற 3 ஆண்டுகள் ஆனது.
தொடர்ந்து 2017ம் ஆண்டு மாலிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட, காதலாக மாறியது, இருவரும் 2019ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடிவெடுத்தனர், இதற்காக தான் எடுத்துக்கொண்ட சிகிச்சையையும் பென்னட் நிறுத்திக் கொண்டார்.
இயற்கையாகவே பென்னட் கருத்தரிக்க, 2020ம் ஆண்டில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது, இருப்பினும் கொரோனா காலம் என்பதால் குழந்தையை வளர்க்க அதிகமாகவே சிரமப்பட்டாராம் பென்னட்.
பல இன்னல்களுக்கு மத்தியில் குழந்தையை அன்புடன் பராமரித்து வளர்க்கும் பென்னட், தன்னை குழந்தையின் தந்தையாகவே நினைத்துக் கொள்கிறாராம்.
குழந்தையும் தன்னை தந்தை என்று அழைப்பதையே பெருமையாகவும் நினைக்கிறாராம்.