அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று முதல் 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள் மற்றும் ஏனைய கல்வி நடவடிக்கைகள் கடுமையான சுகாதார வழிகாட்டல்களின் கீழ் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கோவிட் தொற்று காரணமாக நீண்டகாலமாக பல்கலைக்கழக விரிவுரை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.