நடிகையும் பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடிகையும், நடன இயக்குனருமான ஷோபனா கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நடிகையும் பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தன்னை தனிமை படுத்திக் கொண்டதாகவும், தனிமையை வெறுக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் என்றும் குஷ்பு கூறியிருக்கிறார்.