நாட்டில் காணப்படும் டொலர் நெருக்கடி கடன் கடிதங்கள் வழங்க முடியாமையால் சுமார் 80 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அரச மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இந்த ஆண்டுக்கான (2022) வருடாந்த மருந்து மதிப்பீடுகளுக்கு ஏற்ப மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாததால் சுமார் 80 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முறையான டெண்டர் நடைமுறைகளுக்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஓகஸ்ட் மாதம் முதல் கடன் கடிதம் வழங்கப்படும், மருந்துகளை இறக்குமதி செய்ய நான்கு மாதங்கள் ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம் ஜனவரி மாதமளவில் நாட்டுக்குள் மருந்துகள் கொண்டுவரப்படும் என தெரிவித்த அவர் , எனினும் , இந்த வருடத்துக்கான கடன் கடிதங்கள் இதுவரை வழங்கப்படாத நிலையில், குறித்த மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவருவதில் நான்கு மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.