நாட்டில் தற்போது செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நாட்டில் தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதற்கு காரணம் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே ஆகும் என பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது, 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை விட இம்மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.