நாட்டில் மேலும் 82 கோவிட்-19 ஒமிக்ரோன் திரிபைக் கொண்ட வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோவிட் திரிபு ஆய்வுகளின் அடிப்படையில் 88 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து 82 புதிய Omicron தொற்றாளர்களும், 6 புதிய Delta தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் சமீபத்திய SARS-CoV-2 திரிபு அறிக்கையில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தற்போது – அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் 95% ஆனோர் Omicron தொற்றாளர்கள் என இவ்வாய்வுகளில் தெரிய வருகின்றது.
இந்த 82 மாதிரிகளும், இம்மாதம் (ஜனவரி) 4ஆவது வாரத்தில் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 88 ஒமிக்ரோன் தொற்றாளர்களில் அடையாளம் காணப்பட்ட திரிபுகளும், இரண்டு முக்கிய ஒமிக்ரோன் வரிசைகளான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றின் கலவையாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
Omicron அடையாளம் காணப்பட்ட இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதிய Omicron தொற்றாளர்களில், 30 மாதிரிகள் BA.1 எனவும், அவை கொழும்பு மாநகர சபை, கொழும்பு, தேசிய மனநல நிறுவனம் (NIMH), கெஸ்பேவ, மத்துகம ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
22 மாதிரிகள் BA.1.1 எனவும், அவை, கொழும்பு மாநகர சபை, கொழும்பு, தேசிய மனநல நிறுவனம் (NIMH), கெஸ்பேவ, மத்துகம ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
28 மாதிரிகள் BA.2 எனவும், அவை, கொழும்பு மாநகர சபை, கொழும்பு, ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2 மாதிரிகள் BA.1.529 எனவும், அவை, கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Delta அடையாளம் காணப்பட்ட இடங்கள் பின்வரும் இடங்களில் வெவ்வேறு Delta உப பிறழ்வைக் கொண்ட மாதிரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. AY.104 பிறழ்வை (இலங்கை டெல்டா உப பிறழ்வு) கொண்ட தொற்றாளர்கள் 4 பேர் ஹொரணை, மத்துகம, பாணந்துறை, தேசிய மனநல நிறுவனம் (NIMH) ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.
AY.95 (இலங்கை டெல்டா உப பிறழ்வு) கொண்ட தொற்றாளர் ஒருவர் ஹொரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
B.1.617.2 பிறழ்வைக் கொண்ட ஒருவர் தேசிய மனநல நிறுவனத்தில் (NIMH) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது வரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களில், 25% ஆனோர் BA.2 பிறழ்வைக் கொண்டவர்களாவர், இது ‘ஆர்வத்தின் பிறழ்வு’ என பிரிட்டனின் (UK) – GOV.UK (www.gov.uk) சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ளது.
BA.1 ஐ விட BA.2 அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என ஆரம்பகால ஆய்வுகளில் கண்டறியப்பட்டதுள்ளது. எனவே BA.1 ஐ விட BA.2 அதிகமாக பரவக்கூடியதாக உள்ளது.
ஆயினும், BA.1 ஐ விட BA.2 ஆனது நோயெதிர்ப்புக்கு எதிரான தன்மை குறைவாக இருப்பதாக ஆரம்ப தரவுகள் காட்டுகின்றன.
இது தவிர, இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்ட ஏனைய பிறழ்வு வகைகள் B.1.411: இலங்கை திரிபு, B.1.1.25, B.1.258, B.1.428, B.4, B.4.7, B.1.1.365, B.1.525, B.1, B.1.1 இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு திரிபுகளின் தோற்றம் மற்றும் அவற்றின் மாற்றங்கள் வருமாறு,