இலங்கை முழுவதும் இன்றைய தினம் 10 மணி நேரம் சுழற்சிமுறை மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழிற்சாலைகள், நீர் விநியோக வலயப் பகுதி என புதிய வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமீப மாதங்களில் முன்னெடுக்கப்படும் மின்வெட்டு நடைமுறையில் 10 மணிநேரங்கள் நடைமுறைப்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.
இதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 6 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.



















