தனது மாளிகையை குண்டு போட்டு தகர்த்து விடுமாறு உக்ரைன் இராணுவத்திடம் உக்ரைன் கோடீஸ்வரர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய வீரர்கள் இராணுவத்தளமாக தனது மாளிகையை பயன்படுத்துவதை கண்ட உக்ரைன் நாட்டு கோடீஸ்வரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
துறைமுகத்தை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரிஆண்டிரே ஸ்டாவ்னிட்சர் அண்மையில் சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார். பின்னர் ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து அவர் போலந்தில் தஞ்சமடைந்துள்ளார்.
கீவ் மாகாணத்துக்குள் புகுந்த ரஷ்ய படைகள், அவரது மாளிகையில் தளவாடம் அமைத்து கீவ் நகர் மீது ராக்கெட் ஏவுகணைகளை வீசி வந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை அவரது மாளிகையில் பதுக்கி வைத்துள்ளனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா மூலம் இவற்றை பார்த்த ஸ்டாவ்னிட்சர், தனது மாளிகையின் இருப்பிடம் குறித்து உக்ரைன் இராணுவத்தினருக்கு தெரிவித்ததுடன், குண்டு வீசி அதனை தகர்த்து விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.