மீண்டும் நிதியமைச்சராக கடமையாற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் இராஜினாமா செய்தார்.
எனினும், அந்த இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்ததால், கடந்த 9ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன், அலி சப்ரியின் நிதியமைச்சர் பதவியும் இரத்துச் செய்யப்பட்டது.