இந்தியாவில் இருந்து கிடைத்துள்ள நிவாரணப்பொருட்களை பகிர்வதில் ஜீவன் தொண்டமானின் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன கண்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், நாடு தற்போதைக்கு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதில் அழுத்தம்
அதன் காரணமாக இந்தியாவில் இருந்து கிடைத்த நிவாரணப்பொருட்களை உரிய மக்களை இனம் கண்டு பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தனக்குத் தேவையானவர்களுக்கு மாத்திரம் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்குமாறு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இது விநியோக நடவடிக்கைகளில் கடுமையான தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அரசியலுக்கு அப்பால் இது பொருளாதாரத்தை இழந்த மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் நெவில் விஜேரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.