“இலங்கையில் போர்க் காலத்திலேயே நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்தவன் நான். எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் எனக்கு முதலீடுகளை உள்ளீர்க்க முடியும். அதனைச் செய்து காட்டுவேன்” என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நேற்று(24) பதவியேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதுதான் கப்பலில் ஏறியுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது வேலையை காட்டுவேன். நாட்டுக்கு நிச்சயம் முதலீடுகளைக் கொண்டு வருவேன். அதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
போர் காலம்
மேலும் வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் கடவுச்சீட்டை ஒரு நாளில் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போர் காலத்தில் இவரே இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.