இலங்கை பற்றி எரியும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் உள்ள சொகுசு பங்களாவில் பதுங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் உச்சக்கட்ட போராட்டம் வெடிக்கும் நிலையிலும் கோட்டாபய பதவி விலக மறுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மறுப்பதால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
கோட்டாபய நேற்றையதினம் தனது மனைவி மற்றும் இரண்டு ஊழியர்களுடன் மாலைதீவின் மாலேவுக்கு தப்பிச் சென்ற பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்தார். இது எதிர்ப்பாளர்களை மேலும் கோபப்படுத்தியதென இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
போராட்டக்காரர்கள் இதுவரை ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், பிரதமர் இல்லம் மற்றும் தேசிய ஊடகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி சொகுசு பங்களாவில் பதுங்கியிருக்கிறார். இலங்கைக் குடிமக்களின் எதிர்காலம் இருண்ட நிலையில் உள்ளது.
மாலைதீவு கொழும்பில் இருந்து 700 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு தீவாகும். வான் வழியாக சென்றால் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களில் சென்றுவிடலாம். ஆனால் இலங்கையின் நெருக்கடியை கண்டுகொள்ளவில்லை என இந்திய ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.