பாகற்காயில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது. இவை கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது பாகற்காய்.
இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன. வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய்.
மேலும், நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
அதிலும், பாகற்காயில் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிப்பது ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.
எனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்துவது மிகவும் நன்மை அளிக்கும்.
இதில், பாகற்காய் ஜூஸை சீரான இடைவெளியில் குடித்து வருவது புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது.
மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலம் கணிசமாக குறைகிறது. குறைவான கலோரி மற்றும் ஃபைபர் சத்து நிறைந்திருப்பதால் பாகற்காய் ஜூஸ் அருந்துவது எடை இழப்பிற்கு உதவுகிறது