வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres from November@kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy #AnlArasu @thinkmusicindia #RRamar @ThatsKMS @reddotdzign1 @Synccinema @knackstudios_ @ahatamil @proyuvraaj pic.twitter.com/pDuoNjI120
— aishwarya rajesh (@aishu_dil) October 5, 2022