உலக நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கோவிட் அறிகுறி தென்பட்டால்10 நாட்கள் தனிமையில் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு, கோவிட் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் அறிகுறி இல்லாதவர்கள் 5 நாட்கள் மாத்திரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு அன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது.