யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள கறுப்பு சுதந்திர தின கண்டன பேரணிக்கு 5 கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (31.01.2023) நடைபெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்களின் சொத்துக்கள்ளை சூறையாடினர்
இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம் எதிர்வரம் 4ஆம் திகதி அரசாங்கத்தினால் கொண்டாடப்படவுள்ளது. ஆனால் சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்றுவரை தமிழ் மக்கள் அடக்கி, ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்க தமிழ் மக்களின் கிழக்கு மாகாணத்தை மாற்றுவதற்கு 1949 கல்லோய குடியேற்றம் ஆரம்பித்தார்.
மாறி இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் பல இனக் கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்களை கொலை செய்தமை மாத்திரம் அல்லாது, அவர்களின் சொத்துக்கள்ளையும் சூறையாடினர்.
மேலும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய இனக் கலவரம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை வீறுகொண்டு எழ வைத்தது 83ஆம் ஆண்டிலிருந்து சுயாட்சிக்காக உரிமைக்காக தனி நாடுகோரி போராடிக் கொண்டிருந்தனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
2009ஆம் ஆண்டு 18ஆம் திகதி அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கு ஜனநாயக ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் போரடிவருகின்றது.
இந்த நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பு இனப்பிரச்சினைக்கான தீர்வை தருவதாக ஜனாதிபதி ரணில் கூறிக் கொண்டு சர்வகட்சி மாநாடுகளை நடத்தி வருவதுடன், தமிழ் கட்சிகளுடன் பேசியும் வருகின்றார்.
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஓப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் கூட, கிழக்கில் 5 வருடமாகவும், வடக்கில் 4 வருடமாகவும் நடைபெறவில்லை.
தற்போதைய அரசியல் பொருளாதார சூழ்நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் பகிரப்பட்டு மாகாணசபை தேர்தல் நடத்த வேண்டும் என இந்தியா, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
அதேவேளை, சிங்கள பேரினவாத சகத்திகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்றவர்கள் 13 ஆவது சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என கருத்து தெரிவித்துவருகின்றனா.
சுதந்திரததினத்தை கொண்டாட வேண்டியதில்லை
94ஆம் ஆண்டில் இருந்து 10 வருடம் நாட்டை ஆட்சி செய்த சந்திரிக்கா ஆட்சி காலத்திலே பிராந்தியங்களின் ஒன்றியம் என்று நீலன் திருச்செல்வம், ஜீ.எல்.பீரிஸ் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தை எதிர்காதவர்கள் இன்று 13ஆவது திருத்தசட்டத்தை எதிர்க்கின்றனர்.
ஒட்டுமொத்தத்தில் இந்த நாடு பொருளாதார ரீதியாக பாதிக்ப்பட்டிருக்கும் போது, இலங்கையில் புரையோடிப்போயுள்ள இந்த இனைப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை தராவிட்டால் இந்த நாடு உருப்படுவதற்கான எந்தவிதமான சந்தர்ப்பமும் கிடையாது.
சுதந்திர தினம் கொண்டாப்பட்டிருக்கும் போது, சுதந்திரம் கிடைக்காத தமிழர்கள் ஆகிய நாங்கள் இந்த சுதந்திரததினத்தை கொண்டாட வேண்டிய தேவை இல்லை என்பதுடன், எதிர்வரும் 4ஆம் பல்கலைக்கழக மாணவர்கள் வடகிழக்கு இணைந்து யாழில் இருந்து மட்டக்களப்பு வரை கண்டனப் பேரணி நடத்தவுள்ளது.
அதற்கு இன்று 5 கட்சிகள் இணைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் தமிழ் பேசும் மக்கள் முழுஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளர்.