கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவில் அர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் தீயணைப்பு படைத் தலைமையகத்திலிருந்து சுதுவெல்ல சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள தீயணைப்பு படைத் தலைமையகத்திலிருந்து மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல சந்தியை நோக்கிய வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகள் முடியும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கொழும்பு போக்குவரத்து பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.