முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த தாவரம் என்பதோடு இது சிறந்த மருத்துவ மூலிகைக் கீரையாகும்.
முடக்கத்தான் கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டவையாகும். இது தன்னிச்சையாக வளரக்கூடியது.
முடக்கத்தான் கீரை பயன்கள்
காது வலி
இடுப்புப் பிடிப்பு, இடுப்புக் குடைச்சல், கை கால் வலி, கை கால் குடைச்சல் போன்றவற்றிற்கு முடக்கத்தான் கீரை மருந்தாக உதவுகிறது.
காது வலியை நீக்கும். இக்கீரையை வதக்கிப் பிழிந்து சாறை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட காதுவலி, காது குத்து, சீழ்வடிதல் முதலியன நீங்கும்.
மூல நோய்களுக்கும் இக்கீரை சிறந்த மருந்தாகும். பச்சையாக முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும் என கூறப்படுகிறது.
சுக பிரசவத்துக்கு
முடக்கத்தான் கீரையை இடித்துப் பிரசவிக்கும் நிலையிலுள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டுவதினாலும், இலையின் சாறை பூசுவதினாலும் சிறிது நேரத்திற்குள் சுகப்பிரசவம் ஆகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து அடிவயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
தலைவலிக்கு
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் இருப்பதால் இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களைச் சீர்செய்யும். பாதிக்கப்பட்ட இடங்களில் முடக்கத்தால் இலையில் பற்று வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலிகளைப் போக்கும். முடக்கத்தான் இலைகளை நன்றாகக் கசக்கி, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி சரியாகும்.
வயிறு பிரச்சனைகளுக்கு
எண்ணெய்யில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து தலைக்குத் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
புற்று நோய்களைக் குணமாக்கும். உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டியிருப்பதைத் தடுக்க முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோயின் கடுமை தன்மை குறையும்.
இளமையுடன் வாழ வழிவகுக்கும். இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
இவை உடலில் ஏற்படும் பிரீராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.
வயிற்றுப்புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சினைகளைக் குணமாக்கும்.
தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் அல்சர் பிரச்சினை முற்றிலுமாக விரைவில் குணமாகும்.