க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த பாடசாலை மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
கல்கிரியாகம, திக்வண்ணகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது வீட்டின் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவன் உடனடியாக அடியாகல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவன் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவியின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (26) இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.