கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலைமை மாலை 6 மணி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனடி, காலி வீதி உட்பட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
வீதிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.