வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக போகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 53 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (26-08-2024) காலை போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















