இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் அல்லது தலையீடுகள் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கம்பளை பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியுள்ளது.
தங்களது திட்டத்திற்கு இடையூறு ஏற்படும் என சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்றையதினம் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு, கம்பளை ரயில் நிலையத்திலிருந்து பல மலைகள் ஊடாக அம்புலுவாவ மலை உச்சியை இணைத்து இந்த கேபிள் கார் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஆரம்பக் கட்ட பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.