இலங்கை எதிர்வரும் 2028ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு கடன் செலுத்தலை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட பல சவால்களுக்கு தற்போதைய அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – ப்ளவர் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி காரியாலத்தில் இன்றையதினம் (17-10-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,
அடுத்த நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்களில் இருந்து விலகிச் செல்லாத பொறுப்புக்களுடன் கூடிய குழு ஒன்று அவசியம் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும், புதிய ஜனநாயக முன்னணியிலும் போட்டியிடும் தரப்பிற்கு தாம் தலைமைத்துவம் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.