தேர்தல் மேடையில் சொல்லப்படும் பொய்களை நிறுபிக்க முடியாத சந்தர்ப்பம் வரும்போது அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவரின் ஆதரவாளர்களே சவால் விடுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa ) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
அடுத்த தசாப்தத்தில் அதை ஒரு தீர்க்கமான காரணியாக எமது கட்சி வலுவடையும்.
எமது கட்சியின் தலைவர் கட்சியை விட்டு வெளியேறியதால் உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஜனாதிபதி தேர்தலின் போதும் கூட அவர் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லவில்லை.
அநுரகுமார திஸாநாயக்க
அடுத்த ஐந்து வருடங்களில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anura Kumara Dissanayake) யார் சவால் விடுவார்கள் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவா? நாமல் ராஜபக்சவா? சஜித் பிரேமதாசவா? என கேட்கிறார்கள்.
இதற்கு நான் கூறும் பதில், சவால் விடுவது வேறு யாரும் அல்ல. அவரது குழுவினரே சவாலாக மாறுவார்கள். ஏனென்றால் தேர்தல் மேடையில் சொல்லப்படும் பொய்களை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இது நடைபெறும்.’’ என்றார்.