தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக விருத்தியடையும் என அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.
இதன்காரணமாக, குறித்த பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.