தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாமன்ற உறுப்பினர் டொக்டர் நிஹால் அபேசிங்கவின் கார், நாடாளுமன்ற குளத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
நிஹால் அபேசிங்க ஏற்றுவதற்காக நாடாளுமன்றம் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதி ஆபத்து இன்றி பாதுகாப்பாக, நாடாளுமன்ற ஊழியர்களினால் மீட்கப்பட்டுள்ளார்.
கடும் மழை
நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட செயலமர்வில் கலந்து கொள்வதற்காக நிஹால் அபேசிங்க சென்றிருந்தார்.
கடும் மழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.