கனடா – ரொறன்ரோவில் மருத்துவர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக குடும்ப நல மருத்துவ துறையில் இவ்வாறு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குடும்பநல மருத்துவத்துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிதாக மருத்துவத்துறையில் இணைந்து கொள்ளும் மருத்துவர்களும் குடும்பநல மருத்துவத்துறையை தெரிவு செய்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனவும் இதனால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.