தாய்லாந்தில், கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கை சரிசெய்ய மசாஜ் இற்கு சென்ற இளம்பாடகி நிலையில், தவறான மசாஜால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடலுக்கு மசாஜ் செய்வது உடலையும், மூளையையும் புத்துணர்ச்சி பெற செய்து சுறுசுறுப்பாக மாற்றுகிறது. அதேசமயம் சரியான மசாஜ் நிபுணர்களை கொண்டு இதை செய்யாவிட்டால் பெரும் ஆபத்தாக மாறும் சூழலும் உள்ளது .
மசாஜ்க்கு பிரபலமான தாய்லாந்து நாட்டில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்தில் பிரபலமான இளம் ஆல்பம் பாடகியாக இருந்து வருபவர் பாடகி பிங் சாயதா.
சமீபத்தில் இவருக்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டதால் அதை மசாஜ் செய்து சரி செய்யலாம் என ஒரு மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். எனினும் அங்கு மசாஜ் செய்த பிறகு அவருக்கு மீண்டும் சில நாட்களிலேயே வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மீண்டும் அதே மசாஜ் செண்டர் செய்து மசாஜ் செய்துள்ளார். அடிக்கடி அவர் வலி எடுக்கும்போதெல்லாம் மசாஜ் செண்டர் சென்று வந்த நிலையில், அவருக்கு கைகளில் உணர்வற்ற தன்மை, வீக்கம் போன்றவை உண்டாக தொடங்கியுள்ளது.
இதனால் அவர் இறுதியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை எக்ஸ்ரே எடுத்து சோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அனுப்பியுள்ளனர்.
பின்னர் மீண்டும் உடல்நிலை மோசமாகவே மருத்துவமனையில் சேர்ந்த அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் சரியான முறையில் மசாஜ் செய்யாததால் நரம்புகளில் ஏற்பட்ட மோசமான விளைவுகளே அவரது இறப்புக்கு காரணம் என கூறப்படுகிறமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.