குளிர்காலத்தில் நாம் பெரும்பாலும் அதிகமாக தேநீர் மற்றும் காபி உட்கொள்கிறோம். ஆனால் இந்த பானங்களை அதிகமாக குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
நாம் நம் வீட்டில் தயாரிக்கும் தேநீர் பால், தேயிலை இலைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. அவற்றை அதிகமாக உட்கொள்வது செரிமான சக்தியை பலவீனப்படுத்துவதோடு, உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். ஆகையால், தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக, சில மாற்று பானங்களை உட்கொள்ளலாம்.
இவை நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான மூலிகை தேநீர் வகைகளைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம்
துளசி தேநீர்
பால் மற்றும் சர்க்கரை கலந்த தேநீருக்குப் பதிலாக, துளசி தேநீர் அருந்தலாம். துளசியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை தயார் செய்வது மிகவும் எளிது. துளசி தேநீர் குடிப்பது நுரையீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இஞ்சி தேநீர்
உடலில் ஏற்படும் பொதுவான காய்ச்சல், இருமல், சளி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற இஞ்சி டீயை உட்கொள்ள வேண்டும். இஞ்சி தேநீர் தயாரிக்க, அரை அங்குல இஞ்சியை நசுக்கி, 1 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி குடிக்கலாம்.
மஞ்சள் தேநீர்
குளிர்காலத்தில் மஞ்சள் கட்டி போட்டு தேநீர் குடிப்பது, மஞ்சள் தூள் தேநீர் குடிப்பதை விட மிகவும் சிறந்தது. பச்சை மஞ்சள் தேநீர் குடிப்பது உடலை பல நோய்களிலிருந்து காக்கின்றது. இது ஒரு பாக்டீரியா எதிர்ப்பு தேநீர் ஆகும். இது தொற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கின்றது.
ஆப்பிள் டீ
ஆப்பிள் டீ குடிப்பதால் கொலஸ்ட்ரால் குறையும். ஆப்பிள் டீ குடிப்பதால் உடலுக்கு நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் கிடைக்கின்றன. இந்த தேநீர் குடிப்பதால் எடை இழப்பும் ஏற்படுகிறது. ஆப்பிள் டீ தயாரிக்க, 1 ஆப்பிளை வெட்டி தண்ணீரில் போட்டு, இலவங்கப்பட்டை தூள், கிராம்பு, எலுமிச்சை சாறு மற்றும் தேநீர் பை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
வெந்தய தேநீர்
குளிர்காலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து காக்க வெந்தய டீ குடிப்பது நிவாரணம் அளிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருக்கவும் உதவுகிறது. சோம்பல் மற்றும் அதிக தூக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தேநீர் நன்மை பயக்கும்.