உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தனக்கு சாதகமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யாத நீதியையும் நியாயத்தையும் தற்போதைய அரசாங்கம் செய்யும் என்று நம்புகின்றேன்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் நீதி வழங்கும் பொறுப்பை புறக்கணித்தால், அதற்கு எதிராக செயல்பட ஒருபோதும் தயங்க மாட்டேன்.
மறைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும்.
மேற்கூறிய குற்றங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குறுதியின் அடிப்படையில், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பொறுப்பான நபர்கள் பேராயரின் இல்லத்திற்கு வந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த தேர்தல் காலத்தில் அறிவித்தனர்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற புதிய அரசாங்கத்திற்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில் விசாரணையை நடத்திய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்றும், எனவே நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.