பெந்தோட்டை, போல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 25 வயதுடைய ஜோர்தானியப் பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















