யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் அதிகரித்து வரும் தென்னை மரங்களின் மீதான வெள்ளை ஈயின் தாக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (6) இடம்பெற்ற விவசாய குழு கூட்டத்தின் போதே இந்த விடயம் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, யாழில் அதிகரித்து வரும் வெள்ளை ஈயின் தாக்கம் தென்னைகளை அதிகளவில் பாதிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருந்துகளை விசிறி அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தென்னை பயிர்ச் செய்கை சபை தெரிவித்திருந்தது.
மேலும், வீதிகளை அமைக்கும் போது கமநல சேவைகள் விவசாய குழுக்களின் கருத்துக்களை கேட்டு அவற்றை செய்ய வேண்டும் என்ற விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள், திணைகள் அதிகாரிகள், விவசாய பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய திணைக்களத்தினர், துறை சார்ந்தவர்கள், கமநல சேவை பிரிவினை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



















