இலங்கையில் இன்று (10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் இன்று (10) மாலை நடைபெறவுள்ளது.
நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம் எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.



















