நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது 69 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார்.
மிகவும் கவலை தருகின்ற செய்தி. அவரது கதிரை இன்னும் வெற்றிடமாக இருக்கிறது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் செயலாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இளைய தலைமுறையைச் சேர்ந்த துறவற வாழ்க்கையை வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் தற்போது தடைப்பட்டுள்ள ஆதீனப் பணிகளை முன்னின்று நடாத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான விண்ணப்பம் எம்மால் உத்தியோகபூர்வமாகக் கோரப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.



















