குழந்தைகளுக்கான தேவையுடைய உணவுப் பொருட்கள், பேபி ஃபார்முலா, வைட்டமின்கள் ஆகியவற்றை கடைகளிலிருந்து திருடி, அவற்றை போதைப்பொருட்களுடன் பரிமாறும் ஒருங்கிணைந்த குற்றக் குழுவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பீல் மாகாண பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மிசிசாகா நகரின் மெடோவெல்வ் Meadowvale பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் போது மருந்துப் பொருட்கள் மற்றும் சிறிய வணிக கடைகளை குறிவைக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழு செயல்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து கொகேய்ன் போதைப் பொருள், 30000 டொலர் பெறுமதியான களவாடப்பட்ட பொருட்கள், 34000 டொலர் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களுக்கு எதிராக 33 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.




















