யாழ். நெடுந்தீவில் மலேரியா தொற்று காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் சமீபத்தில் கொங்கோ நாட்டிலிருந்து திரும்பியிருந்த நிலையில், கடுமையான நோய் நிலையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஆறு நாட்களாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், கடுமையான தொற்று மற்றும் பல உறுப்புகளின் செயலிழப்பு காரணமாக நேற்று (9) உயிரிழந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகள் மூலம் அவருக்கு மலேரியா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. யாழ். நெடுந்தீவு பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




















