இன்று (12) அதிகாலை மொனராகலை,வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



















