இன்றைய கால கட்டத்தை பொருத்தவரையில் ஆரோக்கிய உணவு என்பது மிக முக்கியம் ஆகும். பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
ஆயுர்வேதத்தில் நெய் பல நூற்றாண்டுகளாக ஒரு சிறப்பு வாய்ந்த உணவாக போற்றப்படுகிறது. நறுமணமான சுவையுடன், இது ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்களில் செழித்து உள்ளது. எனினும், நெய்யின் முழு நன்மைகளையும் பெற, அதை மிதமாக உட்கொள்ளவதே சிறந்தது.
எலும்பு முறிவை தடுக்க உதவும்
நெய்யில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது, இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறனை உடலுக்கு வழங்குகிறது. இது எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்திற்கு வலுசேர்ப்பதால் மூட்டு வலி மற்றும் எலும்பு முறிவை தடுக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியம் மேம்படும்
நெய்யில் பியூட்ரிக் அமிலம் உள்ளது, இது குடல் புறணியை குணப்படுத்த உதவுகிறது. வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது, உங்கள் குடலை சமநிலைப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
வீக்கம் மற்றும் அழற்சி குறையும்
நெய், குடல் புறணியை வலுப்படுத்தி, உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். எனவே, இது உடலுக்கு இயற்கையான அழற்சி எதிர்ப்பு மருந்தாகச் செயல்படுகிறது




















