ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபடவில்லை என ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக சந்திரிகா பண்டாரநாயக்க மற்ற நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுடன் சேர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஊடகப் பிரிவு கூறுகிறது.




















