மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் உறுதிமொழியை இன்றாவது வழங்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஒரு தனி சிங்கள பௌத்த நாடு அல்ல.
பல மொழி, பல இனங்களைக் கொண்ட நாடு என்பதை ஏற்றுக்கொண்டால், இலங்கையர் என்ற வகையில் அனைவரும் முன்னோக்கிச் செல்லமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



















