மஸ்கெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட சாமிமலை – மீரியகோட்டை பகுதியிலுள்ள தோட்டத்திலிருந்து, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு SG வகை வெடிபொருட்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிரிய பகுதியில் தற்காலிகமாக வசித்துவரும் குறித்த நபர், மீரியகோட்டை பகுதியிலுள்ள 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




















