பிரபல பாடகர் தமித் அசங்க வெல்லவாய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.



















